என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புவி வெப்பமயமாதல்
நீங்கள் தேடியது "புவி வெப்பமயமாதல்"
புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில் புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க ஜி-20 மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ரோம்:
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நிலக்கரி வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாடுகள் நிதி அளிப்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ள அனைத்து நாடுகளும் உறுதி ஏற்க வேண்டும்.
கார்பன் டை ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசை இந்த நூற்றாண்டின் மத்திக்குள் முற்றிலுமாக தடுக்க முடிவெடுக்கப்பட்டது.
2015-ல் நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவியின் தட்பவெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவ ஆண்டுக்கு 7.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை பணக்கார நாடுகள் திரட்ட வேண்டும் என ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இந்த இறுதி முடிவை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கையும் முடுக்கிவிடுவதோடு, மாற்றத்துக்கு தங்களை தயார் செய்து கொள்வது, நிதி ஆதாரங்களை திரட்டுவது ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து நாட்டு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...ரஷ்யாவில் அடங்காத கொரோனா - 85 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு
×

X